சேலத்தில் சூட்கேசில் இளம்பெண் உடல் - தொழில் போட்டியால் கொலை..?

salem beautyparlourownerkilled
By Petchi Avudaiappan Oct 16, 2021 10:38 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

சேலத்தில் பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கலவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அஸ்தம்பட்டி குமாரசாமிபட்டி பகுதியில் வசித்து வரும் பிரதாப் என்பவரது மனைவி தேஜ்மண்டல் சங்கர்நகர் பேர்லண்ஸ் உள்ளிட்ட மூன்று இடங்களில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். கணவர் பிரதாப் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில் கடந்த வாரம் சென்னை சென்றுள்ளார். 

இதனிடையே பிரதாப் தனது மனைவி செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது தொலைபேசியை எடுக்காததால் கட்டிட உரிமையாளரிடம் நேற்று முன்தினம் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கட்டிட உரிமையாளர் வீட்டுக்கு சென்று பார்த்த போது துர்நாற்றம் வீசியதை அடுத்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் விரைந்து வந்து கதவை உடைத்து சென்று பார்த்தனர். அப்போது அறையில் மேல் அலமாரியில் சூட்கேசில் தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில்  அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராகளையும் ஆய்வு செய்தனர்.

அப்போது கொலை செய்யப்பட்ட பெண் வீட்டின் அருகே உள்ள அறையில் இருந்து ஆண், பெண் இருவர் தேஜ் மண்டல் வீட்டிற்கு கடந்த 5 நாட்களுக்கு முன் சென்றதும் அரை மணி நேரம் கழித்து வெளியே வந்ததும் தெரியவந்தது. அதன் பிறகு கதவு திறக்கப்படவில்லை. இதனால் அந்த இருவர் மீதும் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோடா இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இதில் கொலை செய்யப்பட்ட பெண் மீது பள்ளப்பட்டி அஸ்தம்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் விபச்சார தொழில் சம்பந்தமாக வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதனால் தொழில் போட்டியின் காரணமாக இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.