அரசு மகளிர் கல்லூரியில் நடந்த Farewell நிகழ்ச்சியில் முடியை இழுத்து அடித்துக் கொண்ட மாணவிகள் - வைரலாகும் வீடியோ
புதுச்சேரியில் உள்ள முத்தியால் பேட்டை அரசு மகளிர் கல்லூரியில் நடந்த Farewell நிகழ்ச்சியில், மற்ற துறை மாணவிகள் வந்ததால், எங்க நிகழ்ச்சிக்கு நீங்க எப்படி வரலாம் என்று கூறி மாணவர்களுக்கிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் மாணவிகள் முடியை ஒருவரையொருவர் இழுத்து அடித்துக் கொண்டும், துணியை பிடித்து இழுத்து அடித்துக் கொண்ட அதிர்ச்சி வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில், சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அரசு கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வியைச் சேர்ந்த மாணவிகள், கல்லூரி முடித்துவிட்டு பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக மாணவிகள் காத்துகொண்டிருந்த போது திடீரென இரு தரப்பிற்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.