இப்படியே பேசிட்டு இருந்தா செருப்பால அடிப்பேன் - செய்தியாளர்கள் மத்தியில் செருப்பை கழற்ற முயன்ற சீமான்..!
இஸ்லாமிய, கிருஸ்தவர்களை இனி சிறுபான்மையினர் என கூறினால் செருப்பால் அடிப்பேன் என செய்தியாளர்களிடம் சீமான் கொந்தளிப்பாக பேசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவலைப்பட முடியாது
இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று பல தலைவர்களும் அவரது உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "இஸ்லாம், கிறிஸ்தவம் இரண்டும் அநீதிக்கு எதிராக பிறந்தவை. ஆனால், இந்த நாட்டில் மாறி மாறி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆட்சி நடக்கிறது. இதை எப்படி சகித்து கொள்கிறீர்கள்? என வினவினார்.
முழு பேட்டியில் 58 நிமிடம் அக்கறையாக பேசியதாக குறிப்பிட்டு, ஆனால் 2 நிமிடம் பேசியது மட்டுமே தெரிகிறது. இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட முடியாது என தெரிவித்தார்.
செருப்பாலே அடிப்பேன்
இது தன்னுடைய பேரன்பின் வெளிப்பாடுதான் என கூறிய சீமான், தன்னுடைய பெரும் கோபத்தில் உள்ள பேரன்பினை புரிந்து கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் இஸ்லாமிய, கிறிஸ்தவர்களை சிறுபான்மையினர் என குறிப்பிட அதன் காரணமாக கோபமுற்ற சீமான், தொடர்நது அவர்களை சிறுபான்மையினர் என குறிப்பிட்டால் செருப்பாலே அடிப்பேன் என ஆவேசமாக கூறினார்.
மதத்தை வைத்து மனிதர்களை கணிக்கிடுவதை என்பது உலகவரலாற்றில் இல்லை என கூறிய சீமான், இங்குள்ள இஸ்லாமியர்களும், கிருஸ்தவர்களும் பிறப்பால் தமிழர்கள் தான் என கூறினார்.
மேலும், தான் அனைவரையும் சாத்தானின் பிள்ளைகள் என கூறவில்லை என குறிப்பிட்டு அநீதிக்கு துணை நிற்பவர்கள் தான் அவ்வாறு கூறியதாக தெரிவித்தார்.