உணவின்றி அலையும் காட்டெருமைகள்.. பசியில் குப்பைகளை தின்னும் அவலம்!
kodaikanal
Wildcats
By Irumporai
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்.நாளுக்கு நாள் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
வன விலங்குகளான காட்டெருமை , பன்றி , மான் , குரங்கு ஆகியவை உணவுக்காக நகர் பகுதிக்குள் வலம் வருவதால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
கொடைக்கானல் வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது இதன் காரணமாக உணவுக்காக வரும் காட்டெருமைகள் பிளாஸ்டிக் கழிவுகளை திண்று உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, வனத்துறை அதிகாரிகள் வனவிலங்குகளுக்கு தேவைப்படும் உணவுகளை வனப்பகுதிக்குள் ஏற்படுத்தி தர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .