பீஸ்ட் திரைப்பட டிரெய்லர் வெளியாவதற்குள் திரையரங்கு முன் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்
trailer
beast
vijay-fans-celebration
By Nandhini
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழும் நடிகர் விஜய் தற்போது 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார், படம் வருகிற ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ‘பீஸ்ட்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், மதுரை, கோவையில் உள்ள திரையரங்கு முன்பு விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.