காவியை கிழித்தெறிந்தாரா விஜய்? பீஸ்ட் டிரைலரின் புதிய சர்ச்சை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய்.பல்வேறு அசாத்திய நடிப்பால் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர்.
தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இவருக்கு ரசிகர்கள் பலம் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்தன.ஆனால் அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை.
தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய்மக்கள் மன்றத்தினர் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றனர்.
அவர்களின் வெற்றி அரசியல் வட்டாரத்தை திரும்பி பார்க்க வைத்தது. இதையடுத்து அண்மையில் நடிகர் விஜயை புதுச்சேரி முதலமைச்சர் சந்தித்தது பெரும் பேசு பொருளாக மாறியது.
இதனிடையே விஜய் நடிப்பில் உருவான 'பீஸ்ட்' திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
மேலும் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது.
இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். இந்தப் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தற்போது வெளியாகியுள்ள டிரைலரில் நடிகர் விஜய் காவி நிறத்தில் உள்ள பேனர் ஒன்றை கிழிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. தற்போது சமூக வலைத்தளங்களில் அந்த காட்சி வைரலாகி வருகிறது.
You May Like This