Happy New Year Nanba : வெளியானது பீஸ்ட்டின் மாஸ் அப்டேட்

vijay thalapathy65 2022 beast
By Irumporai Dec 31, 2021 01:03 PM GMT
Report

கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கியிருக்கும் நெல்சன் திலீப்குமார் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

அனிருத் இசையில் உர்ய்வாகும் பீஸ்ட் படத்தில் இயக்குநர் செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மால் ஒன்றை கைப்பற்றி தீவிரவாதிகள் சிறைப்பிடித்து வைத்திருக்கும் மக்களை காப்பாற்றுவதுதான் கதை எனதகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் பீஸ்ட் படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, பீஸ்ட் படத்தின் புதிய லுக் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் படம் ஏப்ரல் மாதம் வெளியாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் விஜய் செம மாஸாக உள்ளார் புத்தாண்டு சமயத்தில் இந்த அப்டேட் வெளியாகியுள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்து பீஸ்ட் படத்தின் போஸ்டரை வைரலாக்கிவருகின்றனர்.