விஜய் ரசிகர்களே ரெடியா இருங்க... இன்னைக்கு சாயங்காலம் இருக்கு அடுத்த அப்டேட்...
பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நடிகர் விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன், நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வெளியான படங்களின் அனைத்து சாதனைகளையும் தகர்தெறிந்தது. இன்னும் படம் ரிலீசுக்கு ஒருவாரமே உள்ள நிலையில் சன் டிவியில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 10 ஆம் தேதி ஒளிபரப்பாகவிருக்கிறது.
இதனால் ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் ரசிகர்களை மேலும் மகிழ்விக்கும் வண்ணம் பீஸ்ட் மோட் என்ற மூன்றாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.