பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட் - அரபிக்குத்தை ஓரம் கட்ட தயாராகும் விஜய் ரசிகர்கள்
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பீஸ்ட் படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்பாடல் ரிலீசான 12 நாட்களில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனைப் படைத்தது. இப்பாடலை ரிபீட் மோடில் ரசிகர்கள் பலரும் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் 2ஆம் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 19 ஆம் தேதி பீஸ்ட் படத்தின் “ஜாலியோ ஜிம்கானோனா” என்ற பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை கு.கார்த்திக் எழுத நடிகர் விஜய் பாடியுள்ளார். இப்பாடலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை முன்னிட்டு ட்விட்டரில் #JollyOGymkhana என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.