பீஸ்ட் படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் "பீஸ்ட்". இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டப்படி படத்தை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஜனவரி 26ம் தேதி படத்தின் முதல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.