பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்

poojahegde beast actorvijay arabikuthu jollyogymkhana Beastfromapril BeastFromApril13
By Petchi Avudaiappan Mar 22, 2022 05:51 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’.  பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பீஸ்ட் படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் இப்பாடல் ரிலீசான 12 நாட்களில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனைப் படைத்தது.  இதனைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தின் 2ஆம் பாடலான  “ஜாலியோ ஜிம்கானோனா” என்ற பாடல் மார்ச் 19 ஆம் தேதி வெளியானது. இப்பாடலை நடிகர் விஜய் பாடியிருந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.  அடுத்ததாக கொரோனா பரவலின் முன்னெச்சரிக்கை காரணமாக படத்தின் ஆடியோ வெளியீடு நடக்காது என தகவல் பரவியது. 

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உலகம் முழுவதும் பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.