முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்.... வைரலாகும் புகைப்படம்

Poster Actor Vijay Beast Viral Image
By Thahir Dec 31, 2021 07:54 PM GMT
Report

முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது புத்தாண்டை முன்னிட்டு புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்.... வைரலாகும் புகைப்படம் | Beast Poster Actor Vijay Viral Image

அதில் விஜய் முகத்தில் ரத்தகாயத்துடன் இருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.