ரத்தக்கறையுடன் நடிகர் விஜய் - இணையத்தை அதிர வைத்த புகைப்படம்
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் புதிய புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் தளபதி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனிடையே உலகம் முழுவதும் பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#Beast HD (WM Removed)
— Gajan (@m_gajan) March 29, 2022
2MB (2668x4000)
Drive: https://t.co/W3mzCwcUEH@actorvijay | #BeastFromApril13 pic.twitter.com/Iu6LtwVY9p
இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு அடுத்தடுத்து அப்டேட்டுகள் கொடுத்து படக்குழு மகிழ்வித்து வருகிறது. ஏற்கனவே நாளை பீஸ்ட் குறித்து மிகப்பெரிய அறிவிப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில் ரத்தக்கறையுடன் நடிகர் விஜய் இருப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இதனால் பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் கமர்ஷியல் ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.