5 மொழிகளில் ரிலீசாகும் விஜய்யின் பீஸ்ட் - விஜய்யின் மாஸ் லுக்கில் வெளியான போஸ்டர்

sunpictures Beast பீஸ்ட் BeastFromApril13 బీస్ట్ ബീസ്റ്റ് ಬೀಸ್ಟ್ रॉ
By Petchi Avudaiappan Mar 26, 2022 07:19 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பீஸ்ட் படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

 இதனைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தின் 2ஆம் பாடலான “ஜாலியோ ஜிம்கானோனா” என்ற பாடல் மார்ச் 19 ஆம் தேதி வெளியானது. இப்பாடலை நடிகர் விஜய் பாடியிருந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதற்கு அடுத்தப்படியாக பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

அதன்படி உலகம் முழுவதும் பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பீஸ்ட் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாவதை முன்னிட்டு அதன் போஸ்டர்களை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.