‘பீஸ்ட்’ பட விஜய் போல நடித்து காட்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர் - வெளியான ப்ரொமோ - கலாய்க்கும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்பவர் தான் தளபதி நடிகர் விஜய். நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளனர். அபர்ணா தாஸ், செல்வராகவன்,கிங்ஸ்லி, யோகி பாபு என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறாமல் போனது. அதற்கு பதிலாக சமீபத்தில் நடிகர் விஜய் சன் டிவியில் நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சியில் பேட்டி கொடுத்தார்.
இந்நிலையில், தற்போது விஜய் டிவி, உடன்பிறப்பே - நாளை மாலை 4 மணிக்கு நம்ம விஜய்யில் என்ற ப்ரொமோ வெளியிட்டுள்ளது.
அந்த ப்ரொமோவில்,
கலக்கப்போவது யாரு ராமர் ‘பீஸ்ட்’ படத்தில் நடிகர் விஜய் போன்று நடித்து சிரிக்க வைத்துள்ளார். ‘என்ன... பயமா இருக்கா... இன்னும் பயங்கரமா இருக்கும்...’ என்று கூறி அவர் நடிக்கும்போது, நிகழ்ச்சியில் இருந்தவர்கள் வயிறு குலுங்க சிரிக்கின்றனர்.
இந்தப் ப்ரொமோவைப் பார்த்த நெட்டிசன்கள், பாருங்கடா... Sitiution பார்த்து promo release பண்ணுறாங்க... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.