விஜய் ரசிகர்களை போலீஸ் தேடுதா? சட்டையால் எழுந்த சர்ச்சை - நடந்தது என்ன?
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படம் வருகிற ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அதிலும் அரபிக் குத்து பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து யூடியூபில் 250 மில்லியன் பார்வையாலர்களை கடந்து சாதனை நிகழ்த்தியிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு பல சாதனைகளையும் படைத்தது.
இன்னும் ஒருவார காலமே ரிலீசுக்கு உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான ட்ரெய்லரில் நடிகர் விஜய் ரத்த கறை படித்த சட்டை ஒன்றை அணிந்து வந்திருந்தார்.
தற்போது அந்த சட்டை டிரெண்டாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் பலர் வெள்ளை சட்டையில் ரத்த கறையுடன் கூடிய டிசைன் செய்து அணிந்து அந்த புகைப்படத்தை டிரெண்ட்டாகி வருகின்றனர். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ரசிகர்களின் ரத்தம் கறை படிந்த சட்டையைப் பார்த்த நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதையெல்லாம் பார்த்து போலீஸ் உங்களை பிடிக்காமல் இருந்தால் சரி என்றும், எதை எதையெல்லாம் டிரெண்ட் செய்ய வேண்டும் என்ற விபரமில்லாமல் போய்விட்டது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.