மக்களே அலர்ட்...இன்று மாலை வெளியாகிறது பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்!!

update movie actor vijay beast evening 6 pm
By Swetha Subash Feb 07, 2022 10:54 AM GMT
Report

நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய்.

இவர் நடிப்பில் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் டாக்டர் பட இயக்குனர் நெல்சன் திலிப் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்யிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட நிலையில்,

படத்தை குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.