நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது பீஸ்ட் படத்தின் டிரைலர் - படக்குழு அறிவிப்பு
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழும் நடிகர் விஜய் தற்போது 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார்.
கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார், படம் வருகிற ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகவுள்ளது.
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் வெளிகாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்துள்ளது.
அதிலும் அரபிக் குத்து பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து யூடியூபில் 250 மில்லியன் பார்வையாலர்களை கடந்து சாதனை நிகழ்த்தியிருக்கிறது.
#CINEMAUPDATE | நாளை மாலை 6 மணிக்கு ‘பீஸ்ட்’ ட்ரெய்லர்!#SunNews | @actorvijay | @Nelsondilpkumar | @anirudhofficial | #BeastModeON #BeastTrailerFromTomorrow | #Beast pic.twitter.com/iV6kSV26US
— Sun News (@sunnewstamil) April 1, 2022
'பீஸ்ட்' படத்தின் டிரைலர் ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், நாளை மாலை 6 மணிக்கு டிரைலர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
பிரிட்டனில் ஆளும் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல்: பதவி விலகுகிறார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...! IBC Tamil
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan