‘நா வேண்ணா... உங்க இடுப்ப பிடிச்சுக்கிடும்மா...’ - ‘பீஸ்ட்’டின் இன்னொரு டிரெய்லர் வெளியீடு - ரசிகர்கள் மகிழ்ச்சி

Vijay Trailer thalapathy பீஸ்ட் வெளியீடு beast-movie டிரெய்லர் ரசிகர்கள்மகிழ்ச்சி
By Nandhini Apr 10, 2022 08:55 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழும் நடிகர் விஜய் தற்போது 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார், படம் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகவுள்ளது.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்துள்ளது.

அதிலும் அரபிக் குத்து பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து யூடியூபில் 250 மில்லியன் பார்வையாலர்களை கடந்து சாதனை நிகழ்த்தியிருக்கிறது.

'பீஸ்ட்' படத்தின் டிரெய்லர் ஒரு வாரத்திற்கு முன்பு வெளியானது. பீஸ்ட் படத்தின் முதல் டிரெய்லரை சென்னை, மதுரை, கோவை உட்பட பல மாவட்டத்தில் உள்ள திரையரங்கு முன்பு விஜய் ரசிகர்கள்  பட்டாசு வெடித்து, மாபெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், தற்போது பீஸ்ட் பட இன்னொரு டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதோ அந்த டிரெய்லர் -