Meaner...leaner...stronger... - மாஸா வெளியான ‘பீஸ்ட்’ பட டிரெய்லர் - ரசிகர்கள் கொண்டாட்டம்
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழும் நடிகர் விஜய் தற்போது 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார், படம் வருகிற ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகவுள்ளது.
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்துள்ளது.
அதிலும் அரபிக் குத்து பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து யூடியூபில் 250 மில்லியன் பார்வையாலர்களை கடந்து சாதனை நிகழ்த்தியிருக்கிறது.
'பீஸ்ட்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், மதுரை, கோவையில் உள்ள திரையரங்கு முன்பு விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது பீஸ்ட் பட டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதோ அந்த டிரெய்லர் -