‘பீஸ்ட் பட ரிலீஸ்’ - ஒரு ரசிகனாக... உங்களின் வெற்றி கொண்டாட்டத்தைக் காண ஆவலாக உள்ளேன்...’ - எஸ்.ஏ.சந்திரசேகர்
நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. ‘பீஸ்ட்’ படத்திற்கான டிக்கெட்டிகள் விற்று தீர்ந்து விட்டது.
டிக்கெட்டுகளை எடுத்து வைத்த விஜய் ரசிகர்கள் அதை தன்னுடைய சமூகவலைத்தளங்களில், ஸ்டேட்டில் போட்டு பெருமைப்பட்டு கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ‘பீஸ்ட்’ படம் புதன்கிழமை வெளியாவதையடுத்து, திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்று பீஸ்ட் படம் பார்ப்பதற்காக தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 30 ஊழியர்களுக்கு அரைநாள் விடுமுறை வழங்கி, அவர்களுக்கு டிக்கெட்டும் புக் பண்ணி கொடுத்தது சமூக வலைதளங்களில் வைரலானது.
படம் சம்பந்தப்பட்ட போஸ்டர், டிரைலர், பாடல்கள் என சன் பிக்சர்ஸ் இதுவரை நிறைய வெளியிட்டுவிட்டார்கள். இப்போது நாளை படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், விஜய்யின் பீஸ்ட் படத்தின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விஜய்யின் பீஸ்ட் படம் நாளை ரிலீஸ் ஆவதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர் படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
‘பீஸ்ட்’ படம் ரிலீஸை முன்னிட்டு நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், பாசமுள்ள பிள்ளைகளே.. பீஸ்ட் பட ரிலீஸுக்கு உங்களைப் போலவே நானும் காத்துக்கொண்டிருக்கிறேன்.. ஒரு ரசிகனாக... உங்களின் வெற்றி கொண்டாட்டத்தைக் காண ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சன்டிவியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டி கொடுத்த நடிகர் விஜய், கடவுளுக்கு அடுத்தப்படி தனக்கு என் அப்பாதான். என்னுடைய அப்பாதான் என் குடும்பத்தின் ஆணி வேர் என்று நெகிழ்ந்து கூறினார்.
தந்தைக்கும், மகனுக்கு மகக்கசப்பு உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகிக்கொண்டிருந்தன. தற்போது, அவர்களுக்கிடையில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது வெளிப்பட்டுள்ளது.