‘பீஸ்ட்’ பட கட்டணம் உயர்கிறது - ரசிகர்கள் அதிர்ச்சி

vijay movie thalapathy beast பீஸ்ட் கட்டணம் ரசிகர்கள்அதிர்ச்சி ticket-fee-goes-up உயர்கிறது
By Nandhini Apr 08, 2022 06:41 AM GMT
Report

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படம் வருகிற ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அதிலும் அரபிக் குத்து பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து யூடியூபில் 250 மில்லியன் பார்வையாலர்களை கடந்து சாதனை நிகழ்த்தியிருக்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு பல சாதனைகளையும் படைத்தது. இன்னும் ஒருவார காலமே ரிலீசுக்கு உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பீஸ்ட் திரைப்படத்திற்கான டிக்கெட் விலையை 3 மடங்கு வரை உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று கட்டண உயர்வுக்கு அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

‘பீஸ்ட்’ பட கட்டணம் உயர்கிறது - ரசிகர்கள் அதிர்ச்சி | Beast Movie Thalapathy Vijay Movie Ticket