இணையத்தில் வைரலாகும் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ரசிகர்கள் நெகிழ்ச்சி
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்பவர் தான் தளபதி விஜய். இவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகிறது.
நெல்சன் இந்த படத்தை இயக்க, விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க அபர்ணா தாஸ் செல்வராகவன் கிங்ஸ்லி யோகி பாபு என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறாமல் போனது. அதற்கு பதிலாக தளபதி விஜய் சன் டிவியில் பேட்டி ஒன்று கொடுத்தார். அந்த பேட்டி நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அந்த பேட்டியில் புல்லாங்குழலையும், கால்பந்தையும் வைத்து நடிகர் விஜய் ஒரு குட்டி ஸ்டோரி சொன்னார். அந்த குட்டி ஸ்டோரி தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி -
புல்லாங்குழலிடம், கால்பந்திடமும் காற்று இருக்கிறது. கால்பந்து, புல்லாங்குழலிடம் கேட்டதாம்.. உன்னை மட்டும் ஏன் முத்தமிடுகிறார்கள் என்று...
அதற்கு அந்த புல்லாங்குழல்... தான் சுயநலமாக இல்லாமல், காற்றை இசையாக தருவதால் தன்னை தொடுபவர்கள் முத்தமிடுகிறார்கள்.
ஆனால் நீயோ... சுயநலத்துடன் காற்றை உள்ளேயே வைத்திருப்பதால் உன்னை தொடுபவர்கள் உன்னை மிதிக்கிறார்கள் என்று கால்பந்திடம் புல்லாங்குழல் கூறியது.
இந்த குட்டி ஸ்டோரியை விஜய் பேட்டியில் பகிர்ந்து, மக்களும் சுயநலமின்றி அனைவருக்கும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தற்போது இந்த குட்டி ஸ்டோரியை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.