‘பீஸ்ட்’ பட பேனர்கள் அகற்றம் - போலீசாருடன் விஜய் ரசிகர்கள் கடும் வாக்குவாதம் - வீடியோ வைரல்
நடிகர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படம் ரீலீசுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் சன் டிவியில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 10 ஆம் தேதியான இன்று ஒளிபரப்பாகவிருக்கிறது.இதனால் ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதனிடையே வழக்கம்போல இப்படத்திற்கு சர்ச்சைகளும் எழுத் தொடங்கியது. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் அமைந்துள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இதனைத் தொடர்ந்து அரபு நாடான குவைத்தில் பீஸ்ட் படம் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தற்போது கத்தாரிலும் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
இந்நிலையில், புதுச்சேரியில் விஜய் நடித்த பீஸ்ட் பட பேனர்களை அகற்றியதால் அதிகாரிகளுடன் ரசிகர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பீஸ்ட் பட பேனர்களை போலீசார் உதவியுடன் ஊழியர்கள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் விஜய் ரசிகர்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.