250 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனை படைத்த ‘அரபிக் குத்து’ பாட்டு - மகிழ்ச்சியில் படக்குழுவினர்
கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்ற "ஹலமித்தி ஹபிபோ" பாடல் வெளியிடப்பட்டது.
வெளியிட்ட கொஞ்ச நேரத்துல பாட்டு செம்ம ஹிட்... யார் பார்த்தாலும் இந்த பாட்டைத்தான் முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு இந்தப் பாட்டு பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது.
நடிகர் விஜய்யின் மாஸான நடனமும், அனிருத்தின் அசத்தலான இசையும் இப்பாடலுக்கு பலத்தை சேர்த்துள்ளது. யூட்யூப்பில் இதுவரை 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனையை இப்பாடல் பெற்றுள்ளது.
இப்படம் வரும் 13ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.