விஜய் பிறந்தநாளுக்கு காத்திருக்கும் அடுத்த சர்ப்ரைஸ்... கலகலக்கும் சமூக வலைத்தளங்கள்...

Thalapathy 65 Actor vijay Beastsecondlook
By Petchi Avudaiappan Jun 21, 2021 04:05 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் விஜய் நடித்து வரும் 'தளபதி 65' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று நள்ளிரவு வெளியாகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தளபதி 65'. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

ஜார்ஜியாவில் முதற்கட்டப் படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ள நிலையில் கொரோனா காரணமாக அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, நாளை விஜய் தனது 47வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. "Beast" என இந்தப் படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதனை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அடுத்த சர்ப்ரைஸ் ஆக படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.