“ஆரம்பவே வெறித்தனமா இருக்குது” - உலகமெங்கும் வெளியானது பீஸ்ட் திரைப்படம்

Thalapathy ThalapathyVijay Beast BeastFDFS BeastFromToday ThiraiTheePidikkum
By Petchi Avudaiappan Apr 12, 2022 11:24 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் உலகமெங்கும் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

நடிகர் விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன், நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.   

இதனிடையே பீஸ்ட் படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. முதல் காட்சி காலை 4 மணிக்கு திரையிடப்பட்டதால் இரவு முழுவதும் விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தியேட்டர்களின் உள்ளே படம் பார்க்க செல்லும் ரசிகர்கள் படத்தின் சில வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.