பீஸ்ட் திரைப்படம் வெளியான திரையரங்கு கண்ணாடி உடைப்பு - விஜய் ரசிகர் கைது..!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று அதிகாலை வெளியானது.
இதையடுத்து விஜய் ரசிகர் இரவு முழுவதுமே திரையரங்கு முன்பாக பட்டாசு வெடித்தும் கேக் வெட்டியும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சேலம் மாநகரத்தில் 10க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானது.
இதையடுத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆட்டம் ஆடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சேலம் புதிய பேருந்துநிலையம் அருகே உள்ள ஐந்து திரையரங்கு மற்றும் கைலாஷ் பிரகாஷ் இரண்டு திரையரங்கில் விஜய் ரசிகர்கள் கண்ணாடிகளை உடைத்தனர். இதைக்கண்டு திரையரங்கு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காலை 7 மணிக்கு ஐந்து திரையரங்கில் வெளியான பீஸ்ட் படத்தின் முதல் காட்சியின் போது விஜய் ரசிகர் ஒருவர் கண்ணாடியை உடைத்தார்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை இரத்தம் சொட்ட சொட்ட கைது செய்தனர்.
இதனிடையே அவர் சேலம் மாவட்டம் இரும்பாலையைச் சேர்ந்த அசோக் என்பது தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அசோக் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படவுள்ள விடுதலைப் புலிகள் தலைவரின் நினைவுப் பரிசு! நீதிமன்றின் விசேட உத்தரவு IBC Tamil
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan