பீஸ்ட் படம் மொக்கை..விஜய்காக படம் பார்க்கலாம் - ரசிகர்கள் வேதனை..!

Release Movie Tamilnadu Beast publicopinion ActorVijay
By Thahir Apr 13, 2022 03:26 AM GMT
Report

தளபதி ரசிகர் பெரிதும் எதிர்பார்த்த பீஸ்ட் திரைப்படம் இன்று அதிகாலை தமிழகம் முழுவதும் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்,பூஜா ஹெக்டே நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் இன்று அதிகாலை பீஸ்ட் திரைப்படம் இந்த திரைப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் பீஸ்ட் படக்குழுவும் படத்தை கண்டு ரசித்தனர்.

இதையடுத்து படத்தை பார்த்தபின் ரசிகர் சினி உலகம் சேனலுக்கு பேட்டி அளித்தனர் அப்போது ரசிகர்கள்,நடிகர் விஜய் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது என்று தெரிவித்தனர்.

விஜய்-க்கு அடுத்தபடியாக ரசிகர்களின் அதிக கைதட்டலை பெற்றது VTV கணேஷ் தான். படத்தில் காமெடியன்களாக யோகி பாபு,கிங்ஸ்லி என பலர் நடிந்திருந்தாலும் VTV கணேஷ் தனியாக தெரிவதாக கூறினர்.

பீஸ்ட் படத்தில் விஜய் ஒருபக்கம் பாராட்டை பெற்றுவர மறுபக்கம் VTV கணேஷின் நடிப்பும் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் மொக்கையாக இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

You May Like This