'பீஸ்ட்' படம் பார்க்க ஊழியர்களுக்கு லீவு கொடுத்த நிறுவனம் - வைரலாகும் புகைப்படம்

happy vijayfans beast-movie-realse company-leave
By Nandhini Apr 10, 2022 10:35 AM GMT
Report

நடிகர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படம் வரும் 13ம் தேதி வெளியாக உள்ளது. ரீலீசுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் சன் டிவியில் நடிகர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில், 13ம் தேதி ‘பீஸ்ட்’ படம் வெளியாக உள்ளதால், பட டிக்கெட்கள் புக்கிங் தீர்ந்து விட்டது.

‘பீஸ்ட்’ பட டிக்கெட்டிகளை எடுத்து வைத்து ரசிகர்கள் அதை தன்னுடைய சமூகவலைத்தளங்களில், ஸ்டேட்டில் போட்டு பெருமைப்பட்டு கொண்டு வருவதை பார்க்க முடிகிறது. வரும் புதன்கிழமை படம் வெளியாவதால் பலர் நிறுவனங்கள் லீவு கேட்டு வாங்கி வைத்துள்ளனர். மேலும், சிலரோ பொய் சொல்லி லீவு போட உள்ளனர்.

திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்று பீஸ்ட் படம் பார்ப்பதற்காக தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 30 ஊழியர்களுக்கு அரைநாள் விடுமுறை வழங்கி உள்ளது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு டிக்கெட்டும் புக் பண்ணி கொடுத்திருக்கிறது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், இந்த அறிவிப்பை வழங்கிய அந்நிறுவனத்தை விஜய் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தற்போது இச்செய்தி சமூகவலைத்தளத்தில் வைரலாகவே, கம்பெனின்னா.. இப்படித்தான்ப்பா இருக்கணும்... என்ன மனுஷன்ய்யா.. படம் பார்க்க லீவுலாம் கொடுக்கிறாங்கப்பா.. நம்ம கம்பெனியும்ன்னா இருக்கே... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.