சர்ச்சையை கிளப்பிய ‘பீஸ்ட்’ போஸ்டர்

Thalapathy 65
By Petchi Avudaiappan Jun 22, 2021 05:33 PM GMT
Report

விஜய்யின் "பீஸ்ட்" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இணையாக அந்த போஸ்டரில் அவர் வைத்திருக்கும் துப்பாக்கி குறித்த கேள்வி ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். 

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் நேற்று மாலை மற்றும் நள்ளிரவில் வெளியானது. 

அதில், பெரிய துப்பாகியுடன் விஜய் நின்றிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்தான் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

போஸ்டரில் விஜய் வைத்துள்ள துப்பாக்கி ஷார்ட் கன் என்பதால் அதில் எப்படி தூரத்தில் இருப்பவர்களை குறிபார்க்க பயன்படும் 8x ஸ்கோப்பினை பயன்படுத்த முடியும்? என பலரும் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பான விளக்கங்களையும் பலரும் சமூக வலைதளங்களில் வெளியிட, மீம்ஸ்கள் ரெக்கை கட்டிப் பறந்தன. சிலர் ஸ்கோப் பயன்படுத்தலாம் என தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, முதலில் வெளியிடப்பட்ட பீஸ்ட் போஸ்டரில் ஆக்‌ஷன் என்பது A-c-t-o-n என எழுத்துப் பிழையோடு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.