தியேட்டரில் விஜய் ரசிகர்களை நோக்கி கையசைத்த பூஜா ஹெக்டே - வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்பவர் தான் தளபதி நடிகர் விஜய். நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளனர். அபர்ணா தாஸ், செல்வராகவன்,கிங்ஸ்லி, யோகி பாபு என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறாமல் போனது. அதற்கு பதிலாக சமீபத்தில் நடிகர் விஜய் சன் டிவியில் நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சியில் பேட்டி கொடுத்தார்.
இந்நிலையில், இன்று வெளியான பீஸ்ட் படத்தை பார்ப்பதற்காக இப்பட நடிகை பூஜா ஹெக்டே தியேட்டருக்கு வந்தார். அப்போது, விஜய் ரசிகர்கள் ஆரவாரம் செய்து குதூகலமாக கொண்டாடினர். அப்போது, ரசிகர்களை நோக்கி பூஜா ஹெக்டே கையசைத்து மகிழ்ச்சி தெரிவித்தார். பின்னர், தன்னுடைய இருக்கைக்குச் சென்று அமர்ந்து படத்தை பார்த்து ரசித்தார்.
தற்போது, சமூகவலைத்தளத்தில் இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.