பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Actor Vijay
Beast
By Petchi Avudaiappan
பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் "பீஸ்ட்". இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடிகர் விஜய் பிறந்தநாளன்று ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு, தற்போது அடுத்த அப்டேட்டை வெளியிட தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடிப்பது யார் என்பது குறித்த அறிவிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.