200 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்த 'பீஸ்ட்' திரைப்படம்..!

Vijay Movie Actor Collection Beast விஜய் Crore பீஸ்ட் 200
By Thahir Apr 18, 2022 06:51 AM GMT
Report

2022 ஆம் ஆண்டின் அதிக வசூலை பெற்ற தமிழ் படமாக பீஸ்ட் அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில்,அனிருத் இசையமைப்பில்,விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியானது பீஸ்ட் திரைப்படம்.

முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 50 கோடி வசூலை கடந்த பீஸ்ட் திரைப்படம் இரண்டே நாளில் 100 கோடி வசூலை கடந்ததாக கூறப்பட்டது.

தற்போது முதல் வார இறுதியில் மொத்தம் 5 நாட்களில் ரூ.200 கோடி வசூலை கடந்துவிட்டதாக கூறப்படுகிறது. அஜித் நடித்து வெளிவந்த 'வலிமை' படத்தின் மொத்த வசூல் 200 கோடிதான் என்றார்கள்.

அந்தத் தொகையை 'பீஸ்ட்' படம் ஐந்தே நாட்களில் கடந்துவிட்டது. படம் வெளியான நாட்களில் இருந்து பலரும் பீஸ்ட் திரைப்படம் குறித்து விமர்சனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் பீஸ்ட திரைப்படம் தற்போது 200 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக கூறப்படும் செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.