பீஸ்ட் படத்தை பற்றி வெளியான தகவல் உண்மையா? - உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் திரையுலகம்
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் "பீஸ்ட்". இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இயக்குநர் செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அதன்படி பீஸ்ட் படத்தின் முதல் பாடல் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகும் எனவும், இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் ஒரு பாடல் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.