‘’ என்னது அரபிக் குத்தா அப்படின்னா கேள்வி கேட்ட தளபதி விஜய் '’ : வெளியானது பீஸ்ட் முதல் சிங்கள் ப்ரோமோ
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட் நீண்ட காத்திருப்பிற்கு பின் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் சிங்கள் பாடலான Arabic Kuthu பாடலின் முதல் சிங்கள் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
[
இதையடுத்து பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் எப்போது வெளியாகும் என காத்திருந்தனர் விஜய் ரசிகர்கள்.
இன்று படத்தின் முதல் சிங்கள் பாடலான Arabic Kuthu பாடலின் முதல் சிங்கள் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர், அதில் நடிகர் விஜய் அரபிக் குத்தா அப்படின்னா உங்கள நம்பமுடியாது நீங்க பாட்ட எடுத்துகிட்டு வீட்டுக்கு வாங்க என அனிருத்தினையும் இயகுநர் நெல்சனையும் விஜய் மிரட்டுவது போல பாடல் காட்சியமைக்கப்பட்டுள்ளது.
இதில் பாடல் ஆசிரியராக வரும் நடிகர் சிவகார்த்திக்கேயன் , இயக்குநர் நெல்சன், அனிருத் ஆகியோர் துபாய் ஷேக் கெட்டப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அரபிக் குத்து’ பாடல் வரும் 14ம் தேதி ரிலீஸ் என sunpictures அறிவித்துள்ளது.

Optical illusion: துல்லியமான கண்பார்வைக்கு Test... இதில் “975” களில் இருக்கும் “973” எங்கே? Manithan
