ரிலீசுக்கு முன்பே அமெரிக்காவில் வசூல் சாதனை படைத்த விஜய்யின் ‘பீஸ்ட்’ - ரசிகர்கள் கொண்டாட்டம்
ரிலீசுக்கு முன்னரே பீஸ்ட் படம் அமெரிக்காவில் வசூலில் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் உருவாகும் பீஸ்ட் அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது. படத்தின் பாடல்கள் அடுதடுத்து இடைவெளி விட்டு வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது. அண்மையில் படத்தின் டிரைலரும் வெளியாகியிருந்த நிலையில் ரசிகர்களுக்கு படத்தின் மேல் எதிர்பார்ப்பு எகிரியுள்ளது.
பீஸ்ட் படத்திற்கான டிக்கெட்டிகள் விற்று தீர்ந்து விட்ட நிலையில், டிக்கெட்டுகளை எடுத்து வைத்த விஜய் ரசிகர்கள் அதை தன்னுடைய சமூகவலைத்தளங்களில், ஸ்டேட்டில் போட்டு பெருமைப்பட்டு கொண்டு வருகின்றனர்.
தற்போது, ரிலீசுக்கு முன்னரே பீஸ்ட் படம் அமெரிக்காவில் வசூலில் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான காட்சிகள் திரையிடப்பட உள்ளன.
இதன்மூலம் அமெரிக்காவில் அதிக வசூல் செய்த விஜய் படம் என்ற சாதனையை பீஸ்ட் திரைப்படம் படைத்துள்ளது. மேலும் அண்ணாத்த படத்தின் வசூலையும், பீஸ்ட் இப்போதே முறியடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.