விஜய் நடித்த பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்ய தடை - ரசிகர்கள் அதிர்ச்சி

Vijay qatar beast beastmodeon Thapalathyvijay
By Petchi Avudaiappan Apr 10, 2022 12:35 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்ய அரபு நாடுகளில் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. 

நடிகர் விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன், நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

ரிலீசுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில்  சன் டிவியில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 10 ஆம் தேதியான இன்று ஒளிபரப்பாகவிருக்கிறது. இதனால் ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதனிடையே வழக்கம்போல இப்படத்திற்கு சர்ச்சைகளும் எழுத் தொடங்கியது. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் அமைந்துள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இதனைத் தொடர்ந்து அரபு நாடான குவைத்தில் பீஸ்ட் படம் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தற்போது கத்தாரிலும் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.