VTV , பீஸ்ட் பட புகழ் பழம்பெரும் நடிகை சுப்புலக்ஷ்மி காலமானார்!!
கனவுகளை நோக்கி பயணிக்க வயது தடையில்லை என்பதை காட்டி சென்றுள்ளார் சுப்புலக்ஷ்மி.
சுப்புலக்ஷ்மி
விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் பிணைக்கைதியாக பிடிக்கப்படுபவர்களில் காமெடி செய்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை சுப்புலக்ஷ்மி. இதற்கு முன்னர் இவர் சிம்பு - கவுதம் வாசுதேவ் மேனனின் "விண்ணைத்தாண்டி தருவாயா", அம்மணி போன்ற படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மலையாளி படங்களிலும் நடித்துள்ள சுப்புலட்சுமி, 1972 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலியில் தென்னிந்தியாவின் முதல் பெண் இசையமைப்பாளர் ஆனார். அவர் தனது 60 வயதில் தான் நடிக்கத் துவங்கினார். தற்போது வரை 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் சமீபக்காலமாக கோல்கேட் விளம்பரம், சிப்ஸ் பிராண்டின் ஒன்றில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் ஆகியோருடன் நடித்து இருக்கின்றார்.
தற்போது 87 வயதான இவர் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இவருக்கு ரசிகர்களும், திரை துறை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.