ஜூலை 1 ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது விஜய்யின் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு

Actor Vijay Beast Vijay Beast Movie
By Thahir Jun 24, 2021 05:24 AM GMT
Report

விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 1-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது.

ஜூலை 1 ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது விஜய்யின் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு | Beast Actorvijay

'கோலமாவு கோகிலா' படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உடன் நடிகர் விஜய் கூட்டணி அமைத்துள்ளார். முன்னதாக ’பீஸ்ட்’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது. ஆனால் அதற்கு பிறகு கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கமுடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் திரைப்படங்களின் படப்பிடிப்பை நடத்திக்கொள்ள தமிழக அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதையடுத்து ’பீஸ்ட்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் விஜயுடன் பூஜா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அதேபோல் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.