"திருமணத்தின்போது மணமகன் தாடி வைத்திருந்தால் திருமணம் புறக்கணிக்கப்படும்": கிராம மக்கள் எடுத்த வினோத முடிவு

marriage village beard reject
By Praveen Apr 22, 2021 04:47 PM GMT
Report

மணமகன் திருமணத்தின்போது தாடி வைத்திருந்தால் அந்த திருமணம் புறக்கணிக்கப்படும் என காரைக்கால் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

பல கிராமங்களில் பட்டாசு வெடிப்பதாலும்,செல்போன் பயன்படுத்துவதாலும் இயற்கைக்கும் மரங்களில் வாழும் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் அவற்றைப் புறக்கணித்து வரும் பல கிராமங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

அந்தவகையில் காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தில் பாரம்பரிய வழக்கத்தை கடைப்பிடிக்க மீனவ பஞ்சாயத்தார் கூட்டம்போட்டு வினோதமான முடிவு எடுத்துள்ளனர்.

அதுபற்றிய விவரம் வருமாறு, முன்பெல்லாம் நமது கலாச்சாரத்தின் படி திருமணத்தின்போது மணமகன் தடியை சவரம் செய்து கொண்டு தான் திருமணத்தில் இடம்பெறுவார். ஆனால் காரைக்காலில் கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான திருமண விழாக்களில் மணமகன்கள் முடிவெட்டாமல், தாடியை முழுமையாக சவரம் செய்யாமல் கலந்துகொள்கின்றனர்.

இதனை இருவீட்டாரும் கண்டுகொள்வதும் இல்லை.

இந்த நிலையில் இனிமேல் திருமணத்தின்போது மணமகன் தாடியோடு இருந்தால் அந்த திருமணம் புறக்கணிக்கப்படும் என அந்த கிராமத்து பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.