இரவு நேரத்தில் ஊருக்குள் வாக்கிங் வரும் கரடி: பயத்தில் மக்கள்

Tirunelveli Bear
By Petchi Avudaiappan Aug 02, 2021 03:17 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 நெல்லை மாவட்டம் அருகே இரவு நேரத்தில் ஊருக்குள் வலம் வரும் கரடியால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதியில் உள்ள கோட்டைவிளைபட்டி கிராமத்தில் சுமார் 500 வீடுகளுக்கும் மேல் உள்ளது.

இந்த கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளதால் வனப்பகுதியிலிருந்து கரடிகள் கூட்டமாகவும் தனியாகவும் கிராமத்திற்குள் வருகின்றன. அவ்வாறு வரும் கரடிகள் கிராமத்திலுள்ள தோட்டங்களிலும் நுழைந்து பயிர்களையும், பொருள்களையும் நாசமாக்கி வருகின்றன.

இதனால் இரவு பணி முடித்து மோட்டார் பைக், சைக்கிள்களில் பல தொழிலாளர்கள் வரும் நிலையில் தனியாக வரும் கரடிகளால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே மனிதர்களை தாக்கும் முன் வனத்துறையினர் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.