மின்வேலியில் சிக்கி பலியான ஆண் கரடி - பொதுமக்கள் சோகம்!!

death bear current shock nilgiri masinakudi
By Anupriyamkumaresan Aug 11, 2021 06:34 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

மசினகுடி அருகே தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் கரடி ஒன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள தனியார் தோட்டத்தில் நேற்று ஆண் கரடி ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

மின்வேலியில் சிக்கி பலியான ஆண் கரடி - பொதுமக்கள் சோகம்!! | Bear Death Current Shock In Masinakudi Nilgiris

சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் கரடியின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், காட்டுப் பன்றிகளை தடுப்பதற்காக தோட்டத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி கரடி உயிரிழந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து கரடியை குழிதோண்டி புதைத்து விட்டு சென்றனர்.