பி.இ. கல்விக்கட்டணம் அரசே ஏற்கும்: முதலமைச்சர் அசத்தல் அறிவிப்பு

M. K. Stalin BE students Government of Tamil Nadu
By Anupriyamkumaresan Sep 20, 2021 07:33 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கல்வி
Report

7.5% இடஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “திராவிட இயக்கத்தின் நோக்கம் அனைவருக்கும் கல்வி என்பதுதான்; படிப்பவர்களுக்கு லெனின் கூறிய மூன்று முக்கிய இலக்கு படிப்பு, படிப்பு, படிப்பு. மாணவர்களின் பொறியியல் கனவு நிறைவேறும் நாள் இன்று என்று தெரிவித்துள்ளார்.

பி.இ. கல்விக்கட்டணம் அரசே ஏற்கும்: முதலமைச்சர் அசத்தல் அறிவிப்பு | Be Students College Fees Govt Take Cm Announce

மேலும் பேசிய அவர், அரசுப் பள்ளியில் படித்து 7.5% உள் ஒதுக்கீட்டில் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை தமிழ்நாடு அரசே ஏற்கும். 11000 ஏழை மாணவர்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள் .

தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வி கட்டணத்தைத் தமிழ்நாடு அரசே ஏற்கும். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது என்று கூறியுள்ளார்.