சென்னை பீச்சில் அழகான தோற்றத்தில் ஆபத்தான உயிரினம் - மோசமான விளைவுகள்!
சென்னையில் கடற்கரைக்கு செல்பவர்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ப்ளூ டிராகன்கள்
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையிலும், கரையோர நீர்நிலைகளிலும் கடந்த 2 நாட்களாக ப்ளூ டிராகன்கள் (Glaucus atlanticus) எனப்படும் ஒரு வகை கடல் வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன.
பொதுவாக திறந்த கடல் மேற்பரப்பில் காணப்படும் இந்த நீல டிராகன்கள், புயல் அல்லது கடலில் ஏற்படும் கடல் சீற்றம் காரணமாக சில நேரங்களில் கரைக்கு தள்ளப்படும். இப்படித்தான் இந்த ப்ளூ டிராகன்கள் பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்துள்ளது.
இதுகுறித்து கடல் உயிரியலாளர்கள் கூறுகையில் "சிறிய உயிரினங்கள் லேசான விஷத்தன்மை கொண்டவை என்றும் சில நேரங்களில் உடலில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும், இந்த டிராகன்கள் கொட்டினால் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர். மேலும், சுற்றுச்சூழல் அறக்கட்டளையை சேர்ந்த ஸ்ரீவத்சன் ராம்குமார் என்பவர் இந்த ப்ளூ டிராகன்கள் கண்டறிந்து படங்களை பிரபல ஆங்கில ஊடகத்திடம் கொடுத்துள்ளார்.
கவனம் தேவை
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் "கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பெசன்ட் நகரில் உடைந்த பாலம் பகுதிக்கு அருகில் 50 ப்ளூ டிராகன்களை நான் பார்த்தேன். அவற்றில் சில உயிருடன் இருந்தன, மற்றவை அனைத்தும் மணலில் இறந்து கிடந்தன" என்றார்.
மேலும், இந்த நீல டிராகன்ங்களால் கடற்கரைக்கு செல்வோருக்கு அச்சுறுத்தலாக? என்ற கேள்விக்கு பதில் அளித்த மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி ஜோ கே கிழக்குடன் அளித்த பேட்டியில் "சற்று நச்சுத்தன்மை கொண்டவை. ஏனெனில் நச்சுத்தன்மையுள்ள சைபோனோஃபோர்ஸ், வயலட் நத்தை போன்ற ஆபத்தான விஷத்தை உண்கின்றன.
நீல டிராகன் கள் ஸ்டிங் நெமடோசிஸ்ட்களை தங்கள் கைகளில் சேமித்து வைக்கின்றன. எனவே இவை குழந்தைகளை கொட்டினால் சற்று வலி அதிகமாக இருக்கும். கடற்கரையில் நீச்சல் அடிப்பவர்கள், குளிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எனினும் நீல டிராகன்களால் பகல்நேர வெப்பத்தை தாங்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.