இந்த உயிரினங்களிடம் உஷாரா இருங்க.. எத்தனை ஆண்டுகளானாலும் மனிதர்களை பழிவாங்குமாம்!

United States of America World Washington
By Swetha Nov 11, 2024 08:00 AM GMT
Report

தீங்கு விளைவிக்கும் மனிதர்களை பழிவாங்கும் உயிரினங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 உயிரினங்கள்

பொதுவாக மனிதர்கள் தங்களுக்கு தீங்கு இழைத்தவர்களை பழி வாங்க நினைப்பார்கள். பழி தீர்க்கும் வரை மனதில் அந்த கோபத்தை வைத்திருப்பார்கள். ஆனால் மனிதர்களைப் போலவே உயிரினங்களும் தீங்கு விளைவித்ததை நினைவில் வைத்து பழிவாங்குமா? என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

இந்த உயிரினங்களிடம் உஷாரா இருங்க.. எத்தனை ஆண்டுகளானாலும் மனிதர்களை பழிவாங்குமாம்! | Be Aware This Animal Takes Revenge On Human 17Yrs

பல விலங்குகள் கூர்மையான நினைவாற்றல் கொண்டவை. அந்த வகையில், கடந்த காலத்திலிருந்து மனிதர்களைப் பழிவாங்கும் உயிரினம் காகம்தான் விடையாக உள்ளது. வெறும் 5-10 ஆண்டுகள் மட்டுமல்ல, 17 ஆண்டுகளுக்குப் பிறகும்,

காகங்கள் மனிதர்களால் ஏற்பட்ட தீங்கை நினைவில் வைத்துக் கொண்டு தாக்குதல் நடத்தும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் பேராசிரியர் ஜான் மார்ஸ்லஃப் காகங்களை வைத்து இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

காகங்கள் மனிதனை பழிவாங்குமா? ஆய்வில் வெளியான அதிர வைக்கும் தகவல்

காகங்கள் மனிதனை பழிவாங்குமா? ஆய்வில் வெளியான அதிர வைக்கும் தகவல்

பழிவாங்குமா?

2006 ஆம் ஆண்டு ​​குறிப்பிட்ட முகமூடி ஒன்றை அணிந்து, 7 காகங்களை வலை வைத்து பிடித்து கூண்டில் அடைத்துள்ளார். அடையாளத்திற்காக அவற்றின் இறக்கைகளில் படம் ஒன்றை வரைந்துள்ளார். அதன் பின்னர் எதுவும் செய்யாமல் அவற்றை விடுவித்தார்.

இந்த உயிரினங்களிடம் உஷாரா இருங்க.. எத்தனை ஆண்டுகளானாலும் மனிதர்களை பழிவாங்குமாம்! | Be Aware This Animal Takes Revenge On Human 17Yrs

அதன் பின்னர் அந்த குறிப்பிட்ட முகமூடியை அணிந்து அவர் கல்லூரிக்கு செல்லும் போது எல்லாம் காகங்கள் அவரை பின் தொடர்ந்து தாக்கியுள்ளன. இதில் அவர் அடையாளமிடாத காகங்களும் அவரை தாக்கியுள்ளன.

2013 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தாக்குதல் குறைந்துள்ளது. ஆனால் முழுவதுமாக நின்றுவிடவில்லை. கடந்த செப்டம்பரில் அந்த மாஸ்க் அணிந்து வெளியே செல்லும் போது எந்த காகமும் தாக்கவில்லை.

இதன் மூலம் காகங்கள் 17 வருடங்கள் வரை நினைவு வைத்து கொள்கிறது. மனிதர்களுக்கு உள்ளது போல் கோபம் போன்ற உணர்வுகள் காகங்களுக்கு உள்ளது. மேலும் காகங்கள் தனக்கு ஏற்பட்ட தீங்கை மற்ற காகங்களுக்கு கடத்துகின்றன என தனது ஆய்வை வெளியிட்டுள்ளார்.