ஓய்வு பெறுகிறதா தோனியின் ஜெர்சி எண்? - முன்னாள் வீரர் வேண்டுகோள்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ்.தோனி அணிந்த 7-ம் எண் ஜெர்சியையும் யாருக்கும் அளிக்காமல் பாதுகாக்க வேண்டும் என முன்னாள் வீரர் சாபா கரீம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு அறிவித்த அதே தினத்தில் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
இதனிடையே ஓய்வு பெற்ற லெஜண்ட் வீரர்களின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், ஜெர்சியைப் பாதுகாப்பது என்பது அவர்களது பாரம்பரியத்தைக் காப்பதோடு அவர்களுக்கான மரியாதையையும் அளிப்பதற்கு சமம் என்றும் முன்னாள் வீரர் சாபா கரீம் கூறியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் 10 ஆம் எண் ஜெர்சியை ஒருமுறை ஷர்துல் தாக்கூர் அணிந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது, இதனையடுத்து பிசிசிஐ சச்சின் டெண்டுல்கரின் 10எண் ஜெர்சியை ரிட்டையர்டு செய்தது.
அந்த வகையில் தோனியின் 7 ஆம் எண் ஜெர்சியையும் ரிட்டையர்டு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.