ஐபிஎல் பிளே ஆப் போட்டிகள்; சென்னையில் இருக்கா - பிசிசிஐ அறிவிப்பு
ஐபிஎல் பிளே ஆப் போட்டிகள் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
பிளே ஆப்
16வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 28 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடும் லீக் சுற்று முடிவில்
இதில் டாப்-4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிசிசிஐ ஐபிஎல் பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டியின் அட்டவணையை அறிவித்துள்ளது.
பிசிசிஐ அறிவிப்பு
அதன் அடிப்படையில், பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டி மே 23 முதல் மே 28 வரை சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 23-ம் தேதி முதல் தகுதிச் சுற்றுப் போட்டி மற்றும் மே 24-ம் தேதி எலிமினேட்டர் போட்டி இரண்டும் சென்னையில் நடைபெறவுள்ளது.
அதேபோல், மே 26ம் தேதி 2-வது தகுதிச் சுற்று போட்டி, மே 28ம் தேதி இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.