இந்திய அணியில் இவர்களுக்கு இடமில்லை : பிசிசிஐ அதிரடி முடிவு

BCCI Prithvi Shaw INDvsENG INDvsSL Surya Kumar Yadav
By Petchi Avudaiappan Jul 30, 2021 06:03 PM GMT
Report

 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்பட்ட சூர்ய குமார் யாதவ் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் தற்போது விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் காயம் காரணமாக சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் போட்டித் தொடரிலிருந்து முன்னதாகவே வெளியேறி உள்ளனர்.

இந்திய அணியில் இவர்களுக்கு இடமில்லை : பிசிசிஐ அதிரடி முடிவு | Bcci Replacements For Prithvishaw Suryakumar Yadav

இவர்களுக்கு பதிலாக இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரித்வி ஷா ஆகியோரை பிசிசிஐ இங்கிலாந்துக்கு அனுப்ப முடிவு செய்தது. ஆனால் க்ரூணல் பாண்டியாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மற்ற வீரர்கள் அனைவரும் இலங்கையில் 10 நாட்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

இதன் பின்பு இங்கிலாந்து செல்லும் சூர்யகுமார் யாதவ் மற்றும் ப்ரித்வி ஷா அங்கும் பத்து நாட்கள் தனிமைப் படுத்தப் படுவதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் இவர்கள் இருவரும் ஆட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே இவர்களுக்கு பதிலாக முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் மாற்று வீரர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.