கோலியின் கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ..!
சுப்மன் கில்லுக்கு பதிலாக மாற்று வீரர்களை அனுப்புமாறு இங்கிலாந்திற்கு அனுப்ப விடுக்கப்பட்டிருந்த இந்திய அணி விடுத்திருந்த கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்துள்ளது.
இந்திய அணி, அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் முதல் போட்டி ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்க உள்ளதால் இந்திய வீரர்கள் தீவிரமான பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே காயம் காரணமாக இந்திய அணி வீரர் சுப்மன் கில் தொடரில் இருந்து விலகியுள்ளார்.இதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் போன்ற மாற்று வீரர்கள் இருக்கும் நிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட நெடுந்தொடர் என்பதால் தற்போது இலங்கையில் இருக்கும் தேவ்தட் படிக்கல் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோரை உடனடியாக இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்குமாறு பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்தது.
இந்திய கிரிக்கெட் வாரியமோ ஒருவரை கூட அனுப்ப முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.